1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!

1

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார் இந்துத்துவ சிந்தனையாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியன்.

அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார். விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.தொடர்ந்து இதன் காரணமாக அவர் மீது சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.பி.வி.எஸ் மணியனை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (செப்டம்பர் 14) அதிகாலை 3.30 மணியளவில் சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆர்பிபிஎஸ் மணியன்  மீது 153, 153 a, 505 1(b) 505(2) தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்பிவிஎஸ் மணியனை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  

அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும். ஒருவேளை காவல் உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று நீதிபதியிடம் கோரினார்.

இந்த நிலையில், அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணியனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவரது கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like