1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது..!

1

நடிகர் சிவகார்த்திகேயன் ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார் என்பதும் சில படங்களை விநியோகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆர்டி ராஜா என்பவருடன் இணைந்து சில படங்கள் தயாரித்த நிலையில் அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்தது என்பதும் இதனால் சிவகார்த்திகேயனுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தான் தற்போது சினிமாவில் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் முழுதாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்துக்கு ‘குரங்கு’ பெடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like