#JUST IN : பெண்ணை கர்ப்பமாகி கரு கலைத்த பாடகர் குருகுகனை கைது செய்தது போலீஸ்..!!
பாடகர் குருகுகன் மீது இளம் பெண் புகார் அளித்திருக்கிறார்.
குருகுகனும் அந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்தாகவும் தெரிகிறது. இதன் விளைவு அந்த பெண் வயிற்றில் கரு தங்கிவிட்டது. இதுகுறித்து குருகுகனிடம் சொன்ன போது அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தாராம்.
கருவைக் கலைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் கேட்ட போது குருகுகன் மறுத்துவிட்டாராம். இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அந்த பெண் பரங்கிமலை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து பாடகர் குருகுகனை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.