1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாளை நடைபெற இருந்த "செட்" தேர்வு ஒத்திவைப்பு.! மாணவர்கள் ஏமாற்றம்.!

1

நாளை நடைபெற இருந்த உதவி பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் 'செட்' தேர்வை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 2024ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

முதலில் இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக மே 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. எனவே தமிழ்நாடு முழுவதும் செட் தேர்வில் பங்கேற்க சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

மேலும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என மனோன்மனியம் பல்கலைக்கழகம் அறிவித்தது.இந்த நிலையில் திடீரென செட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த செட் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like