1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பொறுப்பு..!

1

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் பாஜக தலைவர் பதவி மாற்றப்பட இருக்கிறது. இதற்காக மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , தேசிய தலைவர் நட்டாவை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்  "இன்னும் பத்து நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்," என்று தெரிவித்தார். மேலும், "தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்திக்கும்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து பேச உள்ளேன்," என்றும் அவர் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவின் மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

Trending News

Latest News

You May Like