#JUST IN : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.அத்துடன் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஊட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (19.07.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் லஷ்மி பவியா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.