#JUST IN ,: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் நாளை ஜூன் 14-ந் தேதி அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜூன் 14-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை சனிக்கிழமை வழக்கம் போல் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை உள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் கட்டாய விடுமுறை அளிக்க, மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.