#JUST IN : நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
1, தென்காசி- பள்ளி, கல்லூரிகள்.
2, நெல்லை- பள்ளி, கல்லூரிகள்.
3, தூத்துக்குடி- பள்ளி, கல்லூரிகள்.
4. தேனி- பள்ளிகள்.
தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது