#JUST IN : சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

சென்னையில் மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல இடங்களில் இன்னும் மார்பளவு நீர் தேங்கி இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.