#JUST IN : சாட்டை துரைமுருகன் விடுவிப்பு..!

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என திருச்சியைச் சார்ந்த அருண்குமார் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சுமார் 4 மணிநேரம் விசாரணை தொடர்ந்த நிலையில், சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SCST act) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஏற்கனவே, இதுபோன்ற அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற (PCR) நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை நீதிமன்றக்காவலுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்ததை அடுத்து, துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.