#JUST IN : மேற்கூறை இடிந்து விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. மு.க. ஸ்டாலின்..!
திருப்பூர் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில், பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்திற்காக காத்திருந்த கவுதம், மணிகண்டன்,முரளி ராஜன் மரணம்.மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூறை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
#JUSTIN | திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூறை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
— Sun News (@sunnewstamil) October 16, 2023
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு#SunNews | #MKStalin | @mkstalin pic.twitter.com/WpIdnzt0Ay