#JUST IN : ரிதன்யா தற்கொலை: மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
திருப்பூர் அருகே அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைதான நிலையில் மாமியார் சித்ராதேவி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27 என்பவர், கணவர் வீட்டு கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும், அதன் பின்னர் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டனர். கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர்.
ரிதன்யாவின் தந்தை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். பின், இருவரின் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சித்ராதேவி ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் தந்தை தரப்பினர், ஜாமின் வழங்க எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, மனு மீதான விசாரணையை, (11ம் தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனு ஏற்கெனவே, தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுவை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது