#JUST IN :- கடனை அடைக்க ரஜினி, கமல் இணைந்து நடிக்கிறார்கள்..!
ஜாம்பவான்களான இருக்கும் கமல், ரஜினி தமிழ் சினிமாவை கலக்கி வருகுறார்கள். இவர்கள் இருவரும் தனக்கென்று ஒரு பாணியை தேர்ந்தெடுத்து படங்கள் நடித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ரஜினி, கமல் இணைந்து நாடகத்தில் நடிக்க உள்ளனர். இதற்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் நடிக்க உள்ளதை கார்த்தி உறுதிப்படுத்தினார்.
சங்கக் கட்டடப் பணி பாதியில் நின்ற நிலையில், விலைவாசி உயர்ந்து சுமை அதிகரித்ததாகவும், கடன் பெறுவதற்கு வங்கியில் 50% வைப்பு நிதி வைக்க பணம் திரட்ட 4 மாதங்கள் ஆனதாகவும் குறிப்பிட்டார். மேலும், விஜய் ₹1 கோடி தந்ததாகவும் கூறினார்.