1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்..! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

1

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியின் ஓப்பனர்களாக சுப்மன் கில், ரித்திமான் சாஹா களமிறங்கினர். பொறுமையாக தொடக்கம் கொடுத்த இந்த இணையை ரபாடா 3ஆவது ஓவரில் பிரித்தார். 11 ரன்களில் ரித்திமான் சாஹா அவுட்.அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவரை ஹர்ப்ரீத் ப்ரார் 10வது ஓவரில் 26 ரன்களுக்கு விக்கெட்டாக்கினார். 10 ஓவர் முடிவில் குஜராத் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்திருந்தது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 199 ரன்களைச் சேர்த்தது. சுப்மன் கில் 89 ரன்களுடனும், ராகுல் தெவாட்டியா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.பஞ்சாப் அணி தரப்பில் ராபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷத் படேல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சி சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது.  19வது ஓவரில் பஞ்சாப் அணி 18 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. 20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார்.  அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது

Trending News

Latest News

You May Like