1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி..!

1

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது. இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கிம் பங்கேற்கவுள்ளனர். பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். 

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய ஷாட்கன் அணி:

ட்ராப்:

ஆண்கள்: பிருத்விராஜ் தொண்டைமான்
பெண்கள்: ராஜேஸ்வரி குமாரி

ஸ்கீட்:

ஆண்கள்: அனந்த்ஜீத் சிங் நருகா
பெண்கள்: மகேஸ்வரி சவுகான், ரைசா தில்லான்

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால், ஸ்ரேயாசி சிங்கும் அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து பேருக்கும் முதல் ஒலிம்பிக் இது: 

மகேஸ்வரி மற்றும் ஆனந்த்ஜீத் சிங் நருகா  ஸ்கீட் கலப்பு குழு பிரிவில் ஒரே இந்திய ஜோடியாக இடம் பெறுகிறார்கள். தற்செயலாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற 5 பேரும் தங்கள் முதல் ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Trending News

Latest News

You May Like