1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பிரபல யூடுபருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு..!

1

பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் சொல்லும் கருத்துக்கு மக்களிடையே தனி வரவேற்பு உள்ளது. இவர் தங்கம் சேமிப்பது முதல் பண்ணதை முதலீடு செய்வது என பல விஷயங்களை மக்களுக்கு சொல்வதில் கில்லாடி .

ஆனந்த் சீனிவாசன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வணிகப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், நிதித் துறைத் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் பொருளாதாரம் குறித்துப் பேசி வந்த ஆனந்த் சீனிவாசன்,சமீபத்தில் அரசியல் பக்கம் வந்தார். பாஜக அரசைக் கடுமையாகச் சாடி பேசிய ஆனந்த் சீனிவாசன் இந்தியா கூட்டணி நிச்சயம் லோக்சபா தேர்தலில் வெல்லும் எனக் கூறியுள்ளார்.ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனந்த் சீனிவாசன் பங்கேற்று வந்தார். இந்நிலையில், ஆனந்த் சீனிவாசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புதுறை தலைவராக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார்  நியமித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக புள்ளி விபரமாக கருத்துக்களை முன் வைத்து பேசுவார் ஆனந்த் சீனிவாசன். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது 


 

Trending News

Latest News

You May Like