#JUST IN : தவாக நிர்வாகி கொலை: பாமக மாவட்ட செயலாளர் சரணடைந்தார்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற தவாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை வந்திருந்தார். இதன்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிவடைந்த பின், மீண்டும் காரைக்காலுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே திடீரென கார் வழிமறிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் காரை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காரில் இருந்த மணிமாறனை வெளியில் இழுத்து போட்டுள்ளனர். இதனால் மணிமாறன் அச்சத்தில் ஓடி இருக்கிறார். ஆனால் இரு இரு கார்களில் வந்த கும்பல், மணிமாறனினை ஓட ஓட விரட்டி தலையை முற்றிலும் சிதைத்து கொலை செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலைக்கு பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் முருகன், வீரமணி ஆகியோர் காரைக்கால் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். 2021ல் தனது தந்தை தேவமணி கொலைக்கு பழிக்குப்பழியாக மணிமாறனை கூலிப்படை ஏவி கொன்றதாக பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.