JUST IN : இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது. டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஸேன் ஜோடி அந்த அணியை வெற்றி பெற செய்தது. 43 ஓவர்களில் அந்த அணி 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக அந்த அணி உலக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுடன் நிற்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Dear Team India,
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.
We stand with you today and always.