1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கோவை தேர்தல் முடிவை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி..!

1

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவர் கோவை வந்ததாகவும்,  வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும்,  அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை இன்று (30.4.24) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Trending News

Latest News

You May Like