1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நாகை - இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை திடீர் நிறுத்தம்..!

1

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்க திட்டமிட்டன. மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினத்தில் பயணியர் முனையம் அமைப்பது, துறைமுக கால்வாயை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.இந்த கப்பலில் பயணிக்க பயணி ஒவருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நாகை - இலங்கை இடையே கடந்த 14ம் தேதி தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை, வரும் 20ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு. மீண்டும் ஜனவரி மாதம் கப்பல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதனால் இலங்கையில் தங்கியுள்ள பெரும்பாலான சுற்றுலாவாசிகள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

Trending News

Latest News

You May Like