#JUST IN : தேர்தலில் இருந்து ஓபிஎஸ் அணியினர் விலகல் ?
நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் அணியினர் இதுகுறித்து அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்த நிலையில், தற்போது திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்திப்பதால் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் அணி விலகுவதாக கூறப்படுகிறது.