#JUST IN : கோயம்பத்தூரில் ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் கோவையில் விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கனமழை காரணமாக கோவை செல்வபுரம், அசோக் நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:மழை பெய்தால் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். லங்கா காா்னா் பகுதியில் தண்ணீா் தேங்கிய இடத்தில் விரைவாக பணிகளை முடிக்க வலியுறுத்தியும், தாமதமாக பணி செய்வதால் இப்பிரச்னை தொடா்கிறது.