1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஒருநாள் ரமலான் நோன்பு இருக்கும் தவெக தலைவர் விஜய்..!

Q

தமிழகத்தில் ரமலான் மார்ச் 2 தொடங்கியது. இதனையொட்டி, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்தநிலையில், மார்ச் 7-ஆம் தேதி தவெக சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் தவெக தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் இஃப்தார் விருந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் ஒருநாள் ரமலான் நோன்பு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது..

Trending News

Latest News

You May Like