1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!

1

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக பாஜக எம்.பி., ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ தனது வேட்பாளராக ஓம் பிர்லாவை நிறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்பட ஆலோசனை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துகிறது.

ஒம் பிர்லா பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நிபந்தனை விதித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கொடிக்குன்னேல் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவி வழங்கினால் ஒருமித்த கருத்துக்கு பங்களிப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மறுபுறம், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஓம் பிர்லாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Trending News

Latest News

You May Like