#JUST IN : பாமக பொதுக்குழுவிற்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் வரும் 19 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், அன்புமணி அதற்கு உடன்படவில்லை.
இதைத்தொடர்ந்து, போட்டியாக 9 ஆம் தேதியான நாளை மாமல்லபுரத்தில் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில் அன்புமணி கூட்டும் பாமக பொதுக்குழுவிற்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
.png)