#JUST IN : ஓபிஎஸ்-க்கு அடுத்த இடி..!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த நிரந்தர தடைவிதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றையும் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை உறுதிசெய்தது நீதிமன்றம். அதிமுக சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.