8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மிருகத்தின் புதிய புகைப்படம்..!
கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து அவரை தூக்கி சென்று அருகே உள்ள மாந்தோப்பில் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். 8 நாட்களாகியும் இதுவரை அந்த நபரை கைது செய்யவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் கையில் எடுத்து உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை பிடிக்க போலீசார் 8 தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.