1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நெல்லை எஸ்ஐ., கொலை : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!

Q

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் நேற்று அதிகாலை, திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகேயுள்ள மசூதியில் தொழுகை முடித்து, ஜாஹிர் உசேன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நான்கு பேர் கும்பல் ரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது.

ஜாஹிர் உசேன் சில தினங்களுக்கு முன் முதல்வரின் பார்வைக்கு என, ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து சட்டசபையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

'ஜாஹிர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை' என சட்டசபையில் பேசிய இ.பி.எஸ்., குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, 'இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்னிறுத்தப் படுவார்கள்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இந்நிலையில், ஜாஹிர் உசேன் கொலை சம்பவத்தில் ஏற்கனவே அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பட்டுள்ளது என மாநகர போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like