1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நீட் தேர்வு மறுதேர்வு நடத்த முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி..!

W

திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் தேதி மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
தேர்வு மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை என்றாலும், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக 11 மணிக்கு தேர்வு மையத்தின் வளாகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கு பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. தற்காலிக மின் சேவைக்காக எந்த சாதனங்களும் மையத்தில் செய்யப்படவில்லை. குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் தேர்வு எழுத அறவுறுத்தப்பட்டதால் மேலும் சிரமம் ஏற்பட்டது.
கடுமையான சிரமத்திற்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்கள், கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தேர்வு மைய அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் அதனை அவர்கள் நிராகரித்தனர். அதனால், முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை. தேர்வுக்கு பின், மின் தடை காரணமாக சரியாக தேர்வு எழுத முடியவில்லை என இணையதளம் மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எங்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என  மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை
 நடைபெற்றது.
அப்போது இருத்தரப்பு வாதங்களுக்கும் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய மருத்துவ முகமை ஆகியவற்றுக்கு முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த 4ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மின் தடையால் தேர்வெழுதிவதில் சிக்கல்களை சந்தித்ததாகக் கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like