1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கிரிக்கெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் நந்தினி பால்..!

1

கர்நாடக பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நம்மூரில் எப்படி ஆவினோ அதே போல் தான் கர்நாடகாவில் நந்தினி. பச்சை நிற பாக்கெட், ஆரஞ்ச் நிற பாக்கெட் என ஆவின் பால் எப்படி விற்பனை செய்யபடுகிறதோ அதே போல் தான் கர்நாடகாவின் மூலை முடுக்கெல்லாம் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக அரசின் பால் கூட்டமைப்பு நிறுவனமான 'நந்தினி' 2024 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து விளம்பரதாரராக மாறவுள்ளது. அந்த அணிகளுக்கு ஸ்பான்சர் செய்யப்போவதாகவும், போட்டிகளின் போது வீரர்களின் ஜெர்சி மற்றும் மைதானங்களில் 'நந்தினி' பாலின் பிராண்டை விளம்பரப்படுத்துவார்கள் என கர்நாடக அரசின் பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் தெரிவித்தார். நந்தினியை உலகளாவிய பிராண்டாக மாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Trending News

Latest News

You May Like