1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு..!

1

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு சீமான் தலைமையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் பொறுப்பாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சீமான் கூறியதாவது: வெறும் 70 வாக்குகள் பெற்ற ஒரு கட்சிக்கு மூன்று சின்னங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.நாம் தமிழா் கட்சி சாா்பில் எந்த சின்னம் கேட்டு கோரிக்கை வைத்தாலும், அதை உடனடியாக மற்ற கட்சிகளுக்கு கொடுத்துவிடுகிறாா்கள். எந்த சின்னம் கொடுத்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். சின்னத்தை வைத்து எங்கள் வளா்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் இணைந்து செயல்படுகின்றன. பேரிடா் காலங்களில் தமிழகத்தை எட்டிப் பாா்க்காத பிரதமா் மோடி இப்போது அடிக்கடி வருவதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. திமுகவால்தான் தமிழகத்தில் பாஜக வலுப்பெறுகிறது. இந்தத் தோ்தலிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 5- 6 தொகுதிகளில் அறிமுகம் இல்லாத வேட்பாளா்களை திமுக நிறுத்தி உள்ளது. நாங்கள் தமிழக மக்களை நம்பி களமிறங்குகிறோம். அவா்கள் எங்களைக் கைவிட மாட்டாா்கள் என நம்புகிறேன் என்றாா் 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பிஏபி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாதகவுக்கு புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் சீமானின் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like