#JUST IN : பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை கைதுசெய்ய சென்னை வந்த மும்பை போலீஸ்..!
தமிழில் முருங்கைக் காய் சிபிஸ், நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தரன் சந்திரசேகர்.
பிரபல தயாரிப்பாளருமான ரவீந்திரன் பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையை சேர்ந்த அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி . மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த ரோகன் மேனன் என்பவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி தயாரிப்பாளர் ரவீந்திரனை கைது செய்ய சென்னை வந்தனர் மும்பை போலீஸ்.
இதையடுத்து அவரை கைது செய்ய இன்று(ஜூலை 17) மும்பை காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால், ரவீந்திரன் உடல்நிலை காரணமாக கைது செய்யாமல் சம்மன் கொடுத்து சென்றனர்.