1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மோர்னே மோர்கல்!

Q

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய அணிக்கு தற்போது வரை பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. 
இந்நிலையில் இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் செப்.1இல் பொறுப்பேற்பார் என தெரிகிறது. இதுகுறித்து BCCI விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like