1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : 14வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12-ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வரைக்கும் மேல் முறையீடு செய்தும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராக நீடித்து வரும் செந்தில்பாலாஜி, தொடர்ந்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்றுடன் அவரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

அவரது நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற பதைபதைப்பில் திமுகவினர் உள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி ஏற்கெனவே இரண்டு முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை அடுத்தடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றதும் ஏற்க மறுத்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல், வரும் ஜன. 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட அவரின் காவலை 14வது முறையாக நீட்டித்து அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like