1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். 

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இன்றுடன் அவருடைய நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில உள்ள அவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான மனு குறித்து அமலாக்கத்த துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

 

Trending News

Latest News

You May Like