மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..!
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே புதுச்சேரிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார். தொடர்ந்து தமிழகத்தில் மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகள் தவிர்த்து, மற்ற 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 23-ம் தேதி இரவு வெளியிடப்பட்டது.
நேற்று(மார்ச் 25) மதியம் திருநெல்வேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பாட்டார். ஆனாலும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தது காங்கிரஸ் தலைமை.
இந்நிலையில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.அதில் தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.