1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மெரினா கடற்கரை சாலை மறு அறிவிப்பு வரும் வரை தடுப்புகள் அமைத்து மூடல்..!

1

ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்.

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஃபெஞ்சல் புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனிடையே புயல் காரணமாக மீட்பு உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவிதுள்ளார்.

மேலும்  ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை சாலை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடிப்படுகிறது


 

Trending News

Latest News

You May Like