#JUST IN : பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வழங்கிய மராசோ கார்!

கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பெண் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஷர்மிளா. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இப்பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாக அவரை வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதளங்களில் மக்கள் பரப்பியதால் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார் .
இதனிடையே, திமுக எம்.பி. கனிமொழி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தார். அப்போது அவரிடம் பெண் பயிற்சி நடத்துநர் டிக்கெட் கேட்டதால் ஷர்மிளா கோபம் அடைந்தார். இதுதொடர்பான தகராறில் ஷர்மிளாவை பேருந்து நிறுவன உரிமையாளர் டிஸ்மிஸ் செய்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பான நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அந்தப் பெண்ணுக்கு கார் பரிசளித்தார்.அவருக்கு பரிசளிக்கப்பட்டது ரூ.16 லட்சம் மதிப்பிலான மகேந்திரா மரோசோ சொகுசு கார் ஆகும். இந்நிலையில், இனப்பிரு அவர் அந்த காரை எடுத்தார்.
இன்று டெலிவரி எடுப்பதற்காக நேற்று சென்னை வந்த டிரைவர் ஷர்மிளா செய்தியாளர்களை சந்தித்த ஓட்டுநர் ஷர்மிளா கூறியதாவது:-
மெராசோ கார் வாங்கி உள்ளோம். முதலில் கார் எடுத்து கொண்டு ஐடி கம்பெனியில் ஓட்டத்தான் நினைத்தேன், கமல்சார் உங்களுக்கு பஸ் வேணுமா, கார் வேணுமா என்று கேட்டார். எடுத்த உடனேயே பெரியதாக போக வேண்டாம் என்பதால் நான் கார் புக் செய்தேன். முதலில் எர்டிக்கா காரை புக் செய்த நிலையில் கமல்சார் தான் மெராசோ காரை பரிந்துரை செய்தார் என கூறினார்.