#JUST IN : மக்களவை தேர்தலில் போட்டியிடும் மன்சூர் அலிகான் ..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமாகி இருக்கும் நிலையில், பிரபல நடிகர்களை பலரை தொடர்ந்து வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியல் களம் கண்டுள்ளார்.
தமிழ்த்தேசிய புலிகள்" என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த அவர் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன் என ஆணித்தரமாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி, எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே தங்களின் நோக்கம் என்றும் கூறினார்.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் மன்சூர் அலிகான். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மன்சூர் அலிகான் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது அறிக்கையில், "மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்