1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நடிகரை குத்தியவர் அதிரடி கைது..!

Q

பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனால் சயீப் அலிகான், கத்தியால் குத்தப்பட்டதும், அவரது மகன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
கொள்ளையன், அந்த வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வீட்டுப் பணியாளர் அவரைப் பார்த்து யார் என்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு, பணியாளரைத் தாக்க முயன்றபோது அதனைத் தடுக்கச் சென்ற சயீப் அலிகானை, குற்றவாளி கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளி வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை போலீசார் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். 


 

Trending News

Latest News

You May Like