1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது..!

1

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் கடந்த 21 ம் தேதி காலை 8.30 மணிக்கு உருவாகிய வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியானது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை 8.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 25 ம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறகூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழக - இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like