#JUST IN : முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர் ராவ்..!
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.இதன் மூலமாக தெலுங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் கால்பதிக்கிறது.
இந்தநிலையில், தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றியும் பெற்றவர் சந்திரசேகர் ராவ். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி கொடுத்தால் அம்மாநில மக்கள் நமக்குதான் ஓட்டளிப்பார்கள் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது வேறு.
தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.
சந்திரசேகர் ராவ் கட்சியினர் மீது நிறைய ஊழல் புகார்கள் இருக்கின்றன. மேலும் அவரது மகனும், மகளும் கட்சியில் தனி அதிகார மையமாக வலம் வருகின்றனர். அக்கட்சியும் குடும்ப கட்சியாக மாறி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சந்திரசேகர் ராவ் கட்சியை கவிழ்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர் ராவ்...
சந்திரசேகர் ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு