#JUST IN : வெளியானது ஜப்பான் பட டீஸர்..!
தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரன் முதல் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.இதனைத்தொடர்ந்து கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவரது 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் டீஸர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இதோ அந்த டீஸர் உங்களுக்காக