#JUST IN : ஓய்வு பெறுகிறாரா ஜடேஜா?முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா..!

சாம்பியன்ஸ் டிராபி 2025 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது.
ஜடேஜா தன்னோட கடைசி ஓவரை வீசிய பிறகு, கோலி அவரிடம் வந்து கட்டித் தழுவியிருக்கிறார். ஆனா, விராட் கோலி ஜடேஜாவை எதுக்கு கட்டித் தழுவுனாருன்னு சரியா தெரியல. அவர் ODI கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெறப் போகிறார் என தகவல வெளியானது.
ஸ்டீவ் ஸ்மித் ODI கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெறப் போறதா தெரிஞ்சதும், விராட் கோலி அவர கட்டித் தழுவுனாரு. அதே மாதிரி, ரவிச்சந்திரன் அஸ்வின் இன்டர்நேஷனல் கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெறப் போறதா சொன்னதும், கோலி அவர டிரெஸ்ஸிங் ரூம்ல கட்டித் தழுவுனாரு.
ஜடேஜா 10 ஓவர் வீசினதுக்கப்புறம் கோலி அவர கட்டித் தழுவுன போட்டோ சோசியல் மீடியாவுல வைரலா பரவிட்டு இருக்கு. ஆனா, ரவீந்திர ஜடேஜாவோ இல்ல BCCIயோ அவர் ODI கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெறப் போறதா அதிகாரப்பூர்வமா எதுவும் சொல்லல.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.