#JUST IN : இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் கோளாறு..!

விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது 6E 6335 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தின் விமானிகள் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கவனித்ததாக விமான நிலைய இயக்குநர் விபின் காந்த் சேத் தெரிவித்தார்.
விமானம் மீண்டும் ஏப்ரனுக்குக் கொண்டுவரப்பட்டது. பொறியாளர்கள் தொழில்நுட்பக்ந கோளாற்றைச் சரிசெய்த பின்னர், விமானம் புறப்பட்டது.
இந்தூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 140 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.