1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இலங்கை செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!

1

இந்திய அணி இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் 27ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த தொடரிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஒரு நாள் தொடர்: 

ரோஹித் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், துபே, குல்தீப், சிராஜ், சுந்தர், அர்ஷ்தீப், பராக், அக்ஸர், கலீல் மற்றும் ரானா

டி20 தொடர்: 

சூர்ய குமார் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிங்கு, பராக், ரிஷப் பண்ட், சஞ்சு, ஹர்திக், துபே, அக்ஸர், சுந்தர், பிஷ்னோய், அர்ஷ்தீ, கலீல் மற்றும் சிராஜ்

Trending News

Latest News

You May Like