#JUST IN : இந்தியா அபார வெற்றி..! 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது..!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் எடுத்தது.411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட நெதர்லாந்து அணி 2-வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.கொலின் அக்கர்மேன்- மேக்ஸ் ஓ டவுட் நிதானமாக விளையாடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.