#JUST IN : பாமக நிர்வாகி சுரேஷ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!

பாமக நிர்வாகி சுரேஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர், பாமகவில் கடலூர் மக்களவைத் தொகுதியின் பொறுப்பாளராகவும் முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.