1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு..!

Q

‛எனது அனுமதியின்றி எனது பாடல்கள் பயன்படுத்துதாக' சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற ‛கண்மணி அன்போடு காதலன்...' பாடல், அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற ‛ஒத்த ரூபா தாரேன்...' பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்டஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், இன்று(ஜூலை 11) ரிலீஸாகி உள்ளது.

இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்' படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த படாலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like