1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இனி அவதூறாக பேசமாட்டேன் - முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்..!

1

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மாலை விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, விளாத்திகுளம் திமுக நிர்வாகிகள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அருவருக்கத்தக்க வகையில் இழிவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் அளித்தனர்.பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செல்லப்பாண்டியன் அவதூறாக பேசிய நிலையில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B),153(A),505(2),ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உறுதிமொழி கொடுத்ததன் அடிப்படையில், 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் 

Trending News

Latest News

You May Like